--- --:--:-- --

கொரோனாவை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு ” மனதின் குரல்” மூலம் பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி!

2

கொரொனாவுக்கு எதிராக வழுவாக போராடும் இந்திய மக்களுக்கு மோடி தனது மனதின் குரல் மாதாந்திர வானொலி முறையில் பாராட்டு தெரிவித்துள்ளார். பொது முடக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் கட்டாயமாக முககவசங்களை அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

கொரொனா வைரஸ் பரவலுக்கு எதிரான இந்த போர் மிகவும் நீண்டது எனக் குறிப்பிட்டுள்ள மோடி புதிய சவால்களை இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளும் சந்தித்து வருவதாக கூறினார். கொரொனா வைரஸ் பரவலுக்கு எதிரான போரை மிகவும் பணிவுடன் இந்திய மக்கள் எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டு இருக்கும் பிரதமர் உலகமே தற்போது இந்தியா இதை எப்படி சாதித்தது என்று உற்று நோக்குவதாக கூறியுள்ளார்.

 

இந்திய மக்கள் சேவை மனப்பான்மை காரணமாக கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான இந்த போரில் நாம் வலுவுடன் போராட முடிவதாகவும் மோடி கூறியுள்ளார். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரை பாராட்டிய மோடி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரானா வைரஸ் பாதிப்பால் அவதிப்படும் மக்களுக்கு உதவி செய்பவர்களையும் பாராட்டினார்.

 

ஏழைகள் மற்றும் தொழிலாளர்கள் இந்த பிரச்சனையால் மிகவும் அதிகமாக பாதிக்கப் பட்டிருப்பதாக வருத்தம் தெரிவித்த மோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சந்திக்கும் இன்னல்கள் மிகவும் வேதனை அளிப்பதாக கூறினார். இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க கூடிய நகர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும் என தெரிவித்த பிரதமர் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

Leave a Reply

Right Menu Icon