--- --:--:-- --

தமிழ்நாட்டில் இன்று இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்..!

1

மிழ்நாட்டில் இன்றும் நாளையும் மழை குறைந்து வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியல் அதிகமாக பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 8ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

 

இதேபோல், தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும், அதிக வெப்ப நிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் என்பதால், ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

 

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon