--- --:--:-- --

பூண்டி அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளிமாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம்

14

மிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தமிழக பள்ளி கல்வி துறை சார்பில் திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி நகராட்சி, அம்மாபாளையத்தில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பாட புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.

 

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் சஃபியுல்லா, ராமலிங்கம், ரமேஷ், புவனேஸ்வரி, ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி ) கோ.பழனி, திருமுருகன் பூண்டி நகராட்சி தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள், புத்தகப்பை, உள்பட 14 வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

ஆசிரியைகள் லலிதா, புவனேஸ்வரி, சுமதி ஆகியோர் பள்ளி மாணவர்களின் ஒழுக்கங்கள், பள்ளியில் நடந்து கொள்ளும் முறைகள் குறித்து விளக்கி பேசினர். நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் கோபால், கவுன்சிலர் வளர்மதி, உள்பட ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் முத்துக்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை இடைநிலை ஆசிரியர் சுரேஷ்குமார் தொகுத்து வழங்கினார்.

 

முன்னதாக பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார் தலைமையில் தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் ஆசிரியர், ஆசிரியைகள் இனிப்புகள் வழங்கி, பலூன் கொடுத்து கைதட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பின்னர் பள்ளியில் புதிதாக தொடங்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பு அறையை பார்வையிட்டனர். திருக்குறள் உருவம் என் வரி வடிவம் என்னும் உரைக்குறள் நூலை எழுதி, புத்தகமாக வெளியிட்ட பள்ளி ஆங்கில பாட ஆசிரியர் சிவ நடராஜ பிரபுவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 

Right Menu Icon