--- --:--:-- --

நாட்டிலேயே முதன் முறையாக மாணவர்களுக்காக தமிழக அரசின் புதிய செயலி..!

5

நாட்டிலேயே முதன்முறையாக பள்ளி மாணவர்களுக்கு 2d மற்றும் 3டி அனிமேஷன் வீடியோக்கள் மூலம் பாடத்தை கற்று தரும் மணற்கேணி செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் தொடக்க விழா சென்னைக்கு அருகே நடைபெற்றது.

 

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செயலியை அறிமுகப்படுத்தினார். இது கற்பித்தமைக்காக ஆசிரியர்கள் பயன்படுத்தும் துணை கருவிகளில் ஒன்றாகும்.

 

மாநில பாடத்திட்டத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பாடங்கள் 27000 பாடப் பொருளாக பிரிக்கப்பட்டு காணொளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காணொளியின் முடிவிலும் கேள்விகள் கேட்கப்பட்டு கருப் பொருள் புரிதல் திறனை சரி பார்க்கும் வசதியும் செயலியில் உள்ளது.

 

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் மணற்கேணி செயலியை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.

 

Right Menu Icon