மூன்று நாட்களாக 60 அடி ஆழமுள்ள கிணற்றில் சிக்கித் தவித்த முதியவர்..!
கோபிசெட்டிபாளையம் அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து மூன்று நாட்களாக உயிருக்கு போராடிய முதியவர் பத்திரமாக மீட்கப்பட்டார். கூலி தொழிலாளியாக பழனிசாமி என்பவர் அவரால் தன்னை காப்பாற்றும் படி சத்தம் எழுப்பியுள்ளார்.
ஆனால் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் மூன்று நாட்களாக சிக்கித் தவித்துள்ளார்.
பழனிசாமியை தேடி வந்த உறவினர்கள் அவர் கிணற்றில் விழுந்ததை கண்டு தீயணைப்பு துறையினர் உதவியோடு பழனிச்சாமியை உயிருடன் மீட்டனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





