--- --:--:-- --

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு இரவு 11.15 மணிக்கு காலமாகியுள்ளார்..!

14

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு காலமாகியுள்ளார். அவர் காலமாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 13ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

கடந்த 13ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக சேலம் சென்ற வேளையில் விழுப்புரம் அருகே அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் விழுப்புரத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

அதன் தொடர்ச்சியாக சிகிச்சைக்காக விரைந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கக்கூடிய காவிரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து பல்வேறு பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டது.

 

அவருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து கொரொனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு திடீரென்று இருதய பாதிப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவருக்கு எக்மோர் கருவியானது பொருத்தப்பட்டுள்ளது.

 

இதை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்து இருப்பதாகவும் 90% அவருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டது.

 

இந்நிலையில் நேற்று இரவு 11.15 மணியளவில் அமைச்சர் துரைக்கண்ணு காலமாகி உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon