--- --:--:-- --

ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி தொகுப்பாளரை வேலையைவிட்டு நீக்கிய தாலிபான்கள்..!

3

ப்கானிஸ்தானில் பெண் என்பதால் செய்தி தொகுப்பாளரை தாலிபான்கள் வேலையைவிட்டு நீக்கியுள்ளனர். அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனத்தில் தொகுப்பாளராக பணிபுரிந்த வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

 

வழக்கம்போல் வேலைக்கு சென்ற அவரை பெண் என்பதால் வீட்டிற்கு செல்ல அவர்கள் கூறியதாகவும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் வீடியோவை வெளியிட்டு உதவி கோரியுள்ளார்.

 

பெண்கள் படிப்பதற்கும், வேலைக்கும் செல்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தாலிபன்கள் கூறி இருந்ததை கண்டு சந்தோஷம் பட்டதாகவும் ஆனால் தற்போது யதார்த்தத்தை உணர்ந்து வேதனை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

தன்னை மட்டும் இல்லாமல் அரசு ஊடகத்தில் பணிபுரியும் பெண்களை தாலிபான்கள் வேலையை விட்டு நீக்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon