தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்பநிலை 4 டிகிரி வரை அதிகரிக்கும்..!

2 நாட்களுக்குத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, ஜூன் 3 முதல் ஜூன் 5 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

ஜூன் 6 மற்றும் ஜூன் 7 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

அதிகபட்ச வெப்பநிலை பொருத்தவரை, ஜூன் 3 மற்றும் ஜூன் 4 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

 

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் ஒரே நாளில் 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

மிழகத்தில் இன்று ஒரே நாளில் 29 ஆயிரத்து 870
பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைவிட இன்று கொரொனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உள்ளது.


தமிழகத்தில் சென்னை உட்பட 12 இடங்களில் 100டிகிரியை தாண்டி வெப்பம் பதிவு..!

மிழகத்தில் சென்னை உட்பட 12 இடங்களில் நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை, மீனம்பாக்கம், வேலூர் மற்றும் திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

 

இந்தாண்டில் அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும். அதற்கு அடுத்தபடியாக திருச்சி மற்றும் மதுரை விமான நிலையத்தில் தலா 35 டிகிரி ஃபாரன்கீட், சேலம் மற்றும் கரூர் பரமத்தி 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

நுங்கம்பாக்கம், மதுரை, புதுச்சேரியில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மேலும் சில நாட்கள் வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


தமிழகத்தில் நாள்தோறும் 100 பேருக்கு பெருந்தொற்று தடுப்பூசி போடப்படும்..!

மிழகத்தில் நாள்தோறும் 100 பேருக்கு பெருந்தொற்று தடுப்பூசி போடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் மருந்துக் கிடங்கு வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 2கோடி தடுப்பூசிகளை பாதுகாக்கும் வசதி தமிழகத்தில் உள்ளதாக குறிப்பிட்டார்.

 

மத்திய அரசு அனுமதி அளித்த மறுநாளே தடுப்பூசிகள் போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்றும், நாள்தோறும் 100 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

 

முதியவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.


தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் வாங்கப்படுகிறது..!

க்கள் நீதி மையம் திராவிட கட்சி தான் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திருச்சியில் மகளிர் பிரிவு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் வாங்கப்படுவதாக பட்டியல் ஒன்றை வாசித்தார்.

 

செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடவேண்டும் என்ற வகையில் இட ஒதுக்கீடு என்பது தேவையான ஒன்று என கமல் பதிலளித்துள்ளார். டார்ச்லைட் தங்களுக்கு உரியது என்றும், தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் கூறினார்.

 

ரஜினி அரசியல் கட்சியை துவங்குவதாக நாடகமாடுகிறாரா என்ற கேள்விக்கு அவரது உடல்நிலை தான் முக்கியம் என்றார்.


தமிழகத்தில் இன்று 5,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா பாதிப்புக்கு 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின்  மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.

 

தொற்று பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 516 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 23 ஆயிரத்து 231 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 090 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில்  இன்று 988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,44,595 ஆக அதிகரித்துள்ளது. 14 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

 

இதனால் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,910 ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் காலி குடங்களுடன் போராட்டம்

தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாக திமுக. எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.ஆனால் தமிழகத்தில் சென்னை தவிர வேறு எங்கும் தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்று மறுத்துள்ளார், அதிமுக எம்‌எல்‌ஏ. ராஜன் செல்லப்பா. தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் காலி கூடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

பல இடங்களில் குடிநீருக்காக மோதல்களும் ஏற்பட்டு வருகின்றனர். திருவாண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தண்ணீர் பிடித்து கொண்டிருக்கும் போது, யார் முதலில் பிடிப்பது என்பது தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தண்ணீர் பிரச்சனையை தீர்க்க கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திமுக சார்பில் குடிநீர் விநியோகம் செய்வதை திமுக எம்பி கனிமொழி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். கடலூரில், திருமாவளவன் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும் எனவும் கூறினார்.

 

அதே நேரத்தில் தமிழகம் முழுவதும், தண்ணீர் பஞ்சம் என்பதை மறுத்துள்ளார். மதுரை வடக்கு தொகுதியில் அதிமுக எம்‌எல்‌ஏ. ராஜன் செல்லப்பபா மழை வேண்டி பரிகார பூஜை நடத்தப்பட்டதன் அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து இருப்பது மிக மகிழ்ச்சி அளிப்பதாகா கூறியுள்ளார். எதிர் கட்சிகளின் குற்றக்சாட்டு ஒரு புறம், பற்றாக்குறை இல்லை என மறுக்கும் அரசு ஒரு புறம் என அரசியலாகி நிற்கிறது குடிநீர் பிரச்சனை. இதனை தாண்டி மக்களின் தாகம் தீர்க்க தடையின்றி குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.