--- --:--:-- --

தமிழ்நாட்டில் புதிய தமிழகம் இன்றி வெற்றி பெற முடியாது..!

10

மிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகள் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய தமிழகம் கட்சி எந்த கூட்டணியில் இடம்பெறும் என்று தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. கடந்த தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தற்போது வரை எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளார்.

 

நேற்று நடந்த பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, தமிழ்நாட்டில் மதுவால் பல குடும்பங்களும், இளைஞர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலிருந்து தமிழக மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது புதிய தமிழகம் கட்சியின் மிக முக்கியமான நிலைப்பாடு.

 

கூட்டணி குறித்து புதிய தமிழகம் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் ஒருவார காலத்துக்குள் எனது நிலைப்பாட்டை அறிவிப்பேன். யாருடன் கூட்டணி என்பது குறித்து கலந்து பேசி வருகிறோம். தமிழ்நாட்டில் புதிய தமிழகம் இன்றி வெற்றி பெற முடியாத சூழ்நிலையில் தமிழ்நாட்டில் 100 தொகுதிகளில் வலுவாக உள்ளோம். புதிய தமிழகம் கட்சி இல்லாமல் தென்மாவட்டங்களில் யாரும் வெற்றி பெற முடியாது. நாங்கள் தனித்து விடப்படவில்லை” என்றார்.

 

Right Menu Icon