--- --:--:-- --

தேர்வில் கலந்து கொள்ளும் மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்றும்படி வற்புறுத்தக் கூடாது..!

1.2

தேர்வில் கலந்து கொள்ளும் மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்றும்படி வற்புறுத்தக் கூடாது என தேசிய தேர்வு முகமே உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

 

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அரவிந்த் ராஜ் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் நீட் தேர்வில் கலந்து கொள்ளும் திருமணமான விண்ணப்பதாரர்கள் புனிதமாக கருதும் தாலி, மெட்டி மற்றும் காது குத்தி போன்றவற்றை அகற்றும்படி பாதிக்கப்படுவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

 

தேர்வறை கண்காணிப்பாளர்கள் இருக்கும் நிலையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையிலும் ஆபரணங்களை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனையை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon