பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி..!
பெரம்பலூரில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி, அலுவலக கண்காணிப்பாளருக்கு கட்டாய விடுப்பு அளித்து திருச்சி சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். அரியலூரை சேர்ந்த 49 வயது ஹரிஹரன் என்பவர் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
அதே அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலர் ஒருவர் தனக்கு நிலுவையில் உள்ள பணத்தை கேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் அதற்கான நடைமுறைகளை மேற்கொள்வதாக கூறிய ஹரிஹரன் அந்த வாய்ப்பை பயன்படுத்தி பெண் காவலர்கள் செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியும் நேரிலும் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பெண் காவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை குழு அமைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் பெண் காவலர் கொடுத்த புகார் உண்மை என தெரிய வந்தது. மேலும் அவர் பல்வேறு பெண்களுக்கு இதே போன்று பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக விசாரணை குழு அறிக்கையில் தெரியவந்தது.





