--- --:--:-- --

29 வாரங்களில் பிறந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை..!

2

ழனி அரசு மருத்துவமனையில் 29 வாரங்களில் பிறந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து அரசு மருத்துவர்கள் காப்பாற்றி சாதனை புரிந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் திருப்பதி- கவிதா. கவிதா ஏழுமாத கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டது.

 

இதனால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். கவிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் கவிதாவுக்கு பிரசவம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இருபத்தி ஒன்பது வாரங்களில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி கவிதாவிற்கு சுகப்பிரசவம் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் 1.100 கிராம் எடையுள்ள ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பிறந்த குழந்தை குறைப் பிரசவம் என்பதால் உடல் உறுப்புகள் வளராமல் இருந்ததால் குழந்தை சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

 

இதனையடுத்து குழந்தைக்கு ஆக்சிஜன் எந்திரம் மற்றும் சிலிண்டர் ஆகியவற்றின் மூலம் ஒன்பது நாட்களுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து குழந்தை தீவிர சிகிச்சையின் மூலம் குழந்தையின் எடை அதிகமாகி குழந்தை சிரமமின்றி சுவாசிக்க துவங்கியது.

 

Right Menu Icon