--- --:--:-- --

கரூரில் எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் நள்ளிரவில் ரோந்துப் பணி

9

மிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நாளை, ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பதற்றமானவை எனக் கண்டறியப்பட்ட வாக்குச் சாவடிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், அந்தப் பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ளூர் போலீசார், மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் இணைந்து தீவிர வாகனச் சோதனை மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

இதுதொடர்பாக, கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) ஹரிகிரண் பிரசாத் நேற்று நள்ளிரவு கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்களுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

 

 

அதனைத் தொடர்ந்து, எஸ்பி அவர்கள் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டார். நகரின் முக்கிய சாலைகள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளுக்குச் சென்று பாதுகாப்பு நிலவரங்களை அவர் ஆய்வு செய்தார். பொதுமக்கள் அமைதியாகவும், சுதந்திரமாகவும் வாக்களிப்பதை உறுதி செய்யத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

Leave a Reply

Right Menu Icon