--- --:--:-- --

12 ஆவணங்களை அடையாளமாக காட்டலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

10

வாக்​காளர் அட்டை இல்​லா​விட்​டால் ஆதார் உள்​ளிட்ட 12 ஆவணங்​களைக் காட்டி வாக்​களிக்​கலாம் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

 

அதன்​படி, ஆதார் அட்​டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு​தி​யளிப்​புத் திட்​டப் பணி அடை​யாள அட்​டை, புகைப்​படத்​துடன் கூடிய வங்கி அல்​லது அஞ்​சல​கக் கணக்​குப் புத்​தகங்​கள், ஓட்​டுநர் உரிமம், வரு​மான வரி நிரந்தர கணக்கு எண் அட்​டை, இந்​தி​யக் கடவுச்​சீட்​டு, புகைப்​படத்​துடன் கூடிய ஓய்​வூ​திய ஆவணம், மத்​திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறு​வனங்​கள், வரையறுக்​கப்​பட்ட பொது நிறு​வனங்​களின் தொழிலா​ளர்​களுக்கு வழங்​கப்​பட்ட புகைப்​படத்​துடன் கூடிய பணி அடை​யாள அட்​டைகள், நாடாளு​மன்ற, சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களுக்கு வழங்​கப்​பட்​டுள்ள அடை​யாள அட்​டை, இந்​திய அரசின் சமூக நீதி மற்​றும் அதி​காரமளித்​தல் அமைச்​சகத்​தால் வழங்​கப்​பட்ட இயலாமைக்​கான தனித்​து​வ​மான அடை​யாள அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை காண்​பித்து வாக்​களிக்​கலாம்.

Leave a Reply

Right Menu Icon