தீயணைப்பு துறை வீரரை கடித்த பாம்பு..!
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை பகுதியில் ஒரே நாளில் மூன்று மலைபாம்புகள் பிடிபட்டன. குடுமியான்மலை அண்ணா பண்ணை விவசாய கல்லூரிக்குள் மலை பாம்பு புகுந்தது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தீயணைப்பு துறையினர் அங்கு வந்தனர்.
வகுப்பறையில் இருந்த பாம்பை பிடிக்க முயன்ற பொழுது தீயணைப்பு வீரர் ஒருவரை பாம்பு கடித்தது. இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அந்த பாம்பு பிடிக்கப்பட்டது.
இதுபோல் விராலிமலை அருகே விவசாய நிலத்தில் ஒரு மலைப்பாம்பு அன்னவாசல் தாண்டேஸ்வரர் கோயில் வளாகத்தில் பிடிக்கப்பட்டது. அதன்பிறகு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.





