பட்டியல் இன மாணவர்களுக்கு தீண்டாமை கொடுமை நடப்பதாக புகார்..!
திருச்சி மாவட்டம் நெட்டவெலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டியல் இன மாணவர்களுக்கு தீண்டாமை கொடுமை நடப்பதாக ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை சீருடைகளும், பிற சமூகத்தை சேர்ந்த மாணவர்களை சாதாரண உடைகளிலும் பள்ளிகளுக்கு வருமாறு கூறி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தங்கராஜ் கூறுவதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் பட்டியலின மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மதிய உணவு வழங்குவதிலும் அவர் பாகுபாடு பார்ப்பதாக பெற்றோர் மாணவர்கள் அளித்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏற்கனவே இதே பள்ளியில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தமிழாசிரியர் மோகன்தாஸ் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதை விசாரணைக்கு பயந்து ஆசிரியை தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையில் குறிப்பிட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்த தலைமை ஆசிரியராக ஏற்பாடு செய்ததாக புகார் எழுந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





