--- --:--:-- --

திருச்சியில் இன்று திமுக மாநாடு..!

2

மிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று திமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திமுக மாநில மாநாடு இன்று நடைபெறவுள்ளது.

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பாக்கப்படுகிறது. இதற்காக 650 ஏக்கர் பரப்பளவில் 9 நுழைவாயில்களுடன் பிரமாண்ட மாநாட்டு மேடை மற்றும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

 

சுமார் 200 ஏக்கரில் தொண்டர்கள் அமர்வதற்காக இருக்கைகள் போடப்பட்டுள்ள நிலையில் 40,000 முதல் 50,000 வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குடிநீர், கழிவறை, முதலுதவி மையம் மற்றும் சிற்றுண்டி வசதிகளும், சைவ, அசைவ உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாலை 3 மணி அளவில் மாநாட்டு திடலுக்கு வரும் முதலமைச்சர், திமுக கொடியை ஏற்றி வைத்த பின்னர் மேடையில் உரையாற்ற உள்ளார்.

 

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இதே இடத்தில் நடைபெற்ற மாநாட்டில் முக்கிய வாக்குறுதிகளை முதலமைச்சர் வெளியிட்டார். அதேபோல இன்று நடைபெறவுள்ள மாநாட்டிலும் பல்வேறு புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Right Menu Icon