--- --:--:-- --

இன்று திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய்..!

2

ன்று திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய், ரோடு ஷோ சென்று தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய், இரு தொகுதிகளிலும் வென்றார். முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், அவர் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜிநாமா செய்தார்.

 

 

இந்த நிலையில் இன்று மாலை திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய், டிவிஎஸ் டோல்கேட், பால் பண்ணை, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை, அண்ணா சிலை வழியாக 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோடு ஷோ சென்று மக்களை சந்திக்கிறார். தொடர்ந்து புனித ஜோசப் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த நிலையில், கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர்கள் ஆனந்த், ரமேஷ் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon