--- --:--:-- --

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – விதிகளை மீறுவோர் மீது அதிரடி நடவடிக்கை – திருச்சி எஸ்.பி எச்சரிக்கை

9

திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டு, 442 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்களின் விற்பனையாளர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம் உத்தரவிட்டதோடு தனிப் படைகளை அமைத்து பொதுஇடங்கள், கல்வி நிறுவனங்கள் அருகில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தை தடுக்க கடந்த இரண்டு நாட்களாக தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தார்.

அதன்படி, நேற்று உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெட்டவேலம்பட்டி, பச்சபெருமாள்பட்டியில் ரவிந்தர் என்பவர் நடத்திவரும் அவரது கடையில் ஹான்ஸ் 375 பாக்கெட் (112.5 கிலோ), 2.வி1 பாக்கு-230 பாக்கெட்(2.415 கிலோ), கூலிப் 70 பாக்கெட் (17.160 கிலோ), விமல் -291 பாக்கெட் (17.160 கிலோ) என மொத்தமாக -136 கிலோ (மதிப்பு – ரூ.99,700) புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை கைது செய்து அவர் மீது உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

 

 

மேலும், இன்று கீழ அம்மாபேட்டை அருகே புகழேந்தி மற்றும் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜ் ஆகியோர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ் -273.2 கிலோ), 2.வி1பாக்கு- 6.400 கிலோ), கூலிப்- 9.600 கிலோ, விமல் – 16.800 கிலோ மொத்தமாக 306 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படித்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து திருச்சி மாவட்ட எஸ் பி செல்வநாகரத்தினம் தெரிவிக்கையில்; இனிவரும் காலங்களில் புகையிலை மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 

அதனையும் மீறி பொதுஇடங்கள், கல்வி நிறுவனங்கள் அருகில் மற்றும் கடைகளில் புகையிலை பொருட்களை சில்லைறையாகவோ அல்லது மொத்தமாகவோ விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கடைகளில் முறையாக அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் விதிகளை மீறி புகையிலை பொருட்களை முதல்முறையாக விற்பனை செய்யும் விற்பனையாளருக்கு அபராதமும், இரண்டாவது முறையாக விற்பனை செய்பவர்களின் கடையின் வணிக உரிமம் (Trade License) நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon