எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..!
திரைப்பட பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கடந்த 5 ஆம் தேதி கொரொனா தொற்றால் தொடர் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் எஸ்பிபி சரண் தனது தந்தைக்கு உடல்நலம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் வீடியோ வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது எஸ்பிபி பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மருத்துவ குழுவினர் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.







