--- --:--:-- --

கரப்பான் பூச்சி ஜனதா போராட்டம்..!

01

நீட் வினாத்தாள் கசிவு, தகுதி தேர்வுகள் குளறுபடி ஆகியவற்றுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதாதளம் கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் பெரும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டத்தில் சமூக போராளி சோனம் வாங்சுக் 20 நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுவருகிறார்.

 

 

நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் இன்று கூடிய நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல கரப்பான் பூச்சி ஜனதாதளம் கட்சி சார்பில் திட்டமிடப்பட்டது. இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சோனம் வாங்சுக் உடல் நிலை மோசமானதால் அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கும் சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துவருகிறார்.

 

 

அதேசமயம், திட்டமிட்டபடி இன்று நாடாளுமன்றத்தை நோக்கி கரப்பான் பூச்சி ஜனதா தளம் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடாளுமன்றம் செல்லும் பாதையை மூடி டெல்லி போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தினர். ஆனால், கரப்பான் பூச்சி ஜனதா தளம் கட்சியினர் தங்கள் பேரணியை முன்னெடுத்தனர். இதனைத் தொடர்ந்து, பேரணி சென்றவர்கள் மீது டெல்லி காவல்துறையும், பாதுகாப்புப் படையினரும் கடுமையான தடியடி நடத்தினர். அதேபோல், போராட்டக்காரர்களும் காவல்துறை மீது தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு தரப்பினருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

 

 

மேலும், பேரணியை நிறுத்துவதற்கு கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு கரப்பான் பூச்சி ஜனதாதள கட்சிக்கு அழைப்பு விடுத்தது. இதனை ஏற்று கரப்பான் பூச்சி ஜனதாதளம் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா ஆகியோர் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டாவைச் சந்தித்தனர்.

 

 

இந்தச் சந்திப்பில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா, “போராட்டத்தை கைவிட்டு இயல்பு நிலை திரும்ப உதவ வேண்டும். கரப்பான் பூச்சி ஜனதாதளம் கட்சியினரும், இளைஞர்களும் போராட்டத்தை கைவிட வேண்டும்” என போராட்ட பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார்.

 

 

அப்போது போராட்ட பிரதிநிதிகள், “குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். எந்தவித நிபந்தனையும் இன்றி சோனம் வாங்சுக் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்” இந்த மூன்று நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் போராட்டத்தை கைவிடுகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon