கொரொனா பாதிப்பால் தாமதமாகி கொண்டே செல்லும் ககன்யான் திட்டம்..!
கொரொனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்ட இஸ்ரேலின் ஆளில்லா விண்வெளி திட்டம் தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. கொரொனா வைரஸ் தொற்றால் விடுதலை அமைப்பின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணங்களில் தாமதம் ஏற்படும் என அரசிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் கூறுகின்றனர்.
இத்திட்டங்களில் சந்திராயன் 3 மற்றும் ககன்யான் ஆகியவை அடங்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர்கள் சந்திராயன் 3 க்கான பணிகள் நடப்பு ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டு இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரோவை சேர்ந்த பலர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பணிகள் மட்டுமே நடந்து வருவதாலும் தாமதமாகும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.







