--- --:--:-- --

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் சசி தரூர் விடுதலை..!

3

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் அவரது கணவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் டெல்லி சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவரான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சுனந்தா புஷ்கரின் தற்கொலைக்கு தூண்டியதாகவும் கொடுமைப்படுத்தியதாக கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 

இது தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில் அவருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக்கூறி இந்த வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்வதாக டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு கூறியுள்ளது.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சசிதரூர் கடந்த 7 ஆண்டுகளாக சித்திரவதை அனுபவித்ததாக கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon