ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு அரசியலில் அனுமதி உண்டா..? சிரித்த தாலிபன் பிரதிநிதி.!
ஆப்கானிஸ்தானில் பெண்கள் தேர்தல், அரசியலில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்களா என்ற பெண் செய்தியாளரின் கேள்வியை கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல் பிரதிநிதி ஒருவர் கேமராவை ஆஃப் செய்ய கூறும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 15ஆம் தேதி ஆகஸ்ட் தலிபான்கள் 20 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் அதிகாரத்தை பிடித்துள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பிரதிநிதி சிரித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
அது இஸ்லாமிய ஷரியத் சட்டம் அனுமதிக்கும் அளவுக்கு பெண்களுக்கு தங்களது ஆட்சியில் உரிமைகள் வழங்கப்படும் என கூறினார். தொடர்ந்து பெண்களுக்கான ஆட்சி அதிகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் சிரிப்பை அடக்க முடியாமல் கேமராவை ஆஃப் செய்யுமாறு கூறும் காட்சிகள் பதிவாகியுள்ளன.





