கவர்ச்சியை நம்பி வாக்களித்துவிட்டார்கள் மக்கள் – எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்று விமர்சித்துள்ளார்.
அரசியலில் வெற்றி, தோல்வி என்பது மிகவும் சகஜமானது எனக் குறிப்பிட்ட அவர், மக்கள் வெறும் கவர்ச்சியை நம்பி வாக்களித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றால், மீண்டும் மாநில ஆட்சியைப் பிடிப்பது சாத்தியமே என்று கட்சியின் நிர்வாகிகளிடையே நம்பிக்கையூட்டும் வகையில் அவர் உரையாற்றியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




