--- --:--:-- --

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – 10 அதிரடி கட்டளைகள்..!

4

மிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது. இந்தநிலையில் சுகாதாரத்துறை சார்பில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

முதல் நாளில் 50 சதவீத மாணவர்களும், இரண்டாம் நாளில் 50 சதவீத மாணவர்களும் மாறிமாறி பள்ளிபள்ளிக்கு வரவேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரொனா அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்களை பள்ளிக்கு அனுமதிக்கக்கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விட்டமின் சி, ஈ மற்றும் நோயெதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க வேண்டும் என்றும் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் உடல்நிலையில் அவ்வப்போது பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மாணவர்கள் கைகழுவும் வசதி, உடல் வெப்பத்தை பரிசோதனை செய்யும் கருவிகள் இடம் பெற வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை கண்காணிப்பாளர்கள் பள்ளியில் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் மற்றும் அதனை தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை உறுதிப்படுத்த பள்ளிகளில் ஒரு தனிக்குழு அமைக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பள்ளிகளில் ஏதேனும் பாதிப்பு கண்டறிந்து ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon