ராகு-கேது பெயர்ச்சி…ராஜ யோகம் பெரும் ராசிகள்
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 65
சார்வரி வருடம் ஆவணி மாதம் 16-ம் நாள் அதாவது வரும் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி, அவிட்டம் நட்சத்திர நாளன்று, மதியம் 2.10 மணிக்கு, மிருகசீரிடம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் வீடுள்ள ரிஷப ராசியில் ராகு பகவானும், கேட்டை நட்சத்திரம் 4 – ம் பாதத்தில் வீடுள்ள விருச்சிக ராசியில் கேது பகவானும் வாக்கியப் பஞ்சாங்கப்படி பெயர்ச்சி அடைகிறார்கள்.
ராகு-கேது என்று இரு கிரகங்கள் இடம் பெயர்ந்தாலும் இதில் தலை என்று கருதப்படும் ராகுவை முதன்மைப்.படுத்தியே பலன்கள் சொல்லப்படுகின்றன. கருநாகமாகிய ராகுபகவான், கடந்த ஒன்றரை வருடம் புதனின் வீடாகிய மிதுன ராசியில் அமர்ந்து பல இன்னல்களையும் கொரோனா போன்ற பாதிப்புகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் தந்து வந்தார். ராகு இனி குருவாகிய சுக்கிரனின் வீட்டில் அமர்வதால் பிரச்சனைகள் ஓரளவு குறையும்; ஆனால், மக்களிடையே போராடும் குணம் அதிகரிக்கும். இனி 12 ராசிக்காரர்களுக்கான பொதுவான பலன்களும், அதற்கான பரிகாரங்களை சுருக்கமாக பார்ப்போம்.
பேச்சில் நேர்த்தி கொண்டிருக்கும் மேஷ ராசி அன்பர்களே, இனி நீங்கள் தொடங்கும் செயல்கள் வெற்றி பெறும். பேச்சு சாதுரியத்தால், சாதிப்பீர்கள். பூர்வீக சொத்து போன்றவற்றில் புதிய பிரச்சனைகள் வரக்கூடும். குறிப்பாக, பங்காளிகளுடன் கருத்து வேறுபாடு தோன்றலாம். வியாபாரிகள், சுயதொழில் செய்வோருக்கு அலைச்சல் அதிகரிக்கும். கடன் கொடுப்பது ஆபத்தானது. சுருக்கமான சொல்வதானால் நீங்கள் லாபம் பார்க்க அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். விவசாயிகள் கலைஞர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்தநிலைமை மாறும்.
பரிகாரம் – இயலாதவர்களுக்கும் உதவி செய்து அவர்களின் ஆசியை பெறுங்கள். வினாயகரை வழிபட்டு வாருங்கள்.

சவாலைகளை சாகதமாக்கும் ரிஷப ராசி நேயர்களே! புதிய செயல்களை தொடங்கும் போது, நிதானமாக, திட்டமிட்டு தொடங்க வேண்டும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கால் வைக்கவும். ராகு பெயர்ச்சியின் ஆரம்பத்தில் சிறிது கொஞ்சம் மந்த கதியில் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்து நல்ல பலன்கள் கிடைக்கும். தொழில், வேலை, வியாபாரம் படிப்படியாக முன்னேறும். நிதிநிலைமை திருப்தி தருவதாக இருந்தாலும், வீண்செலவுகளை நீங்கள் கண்டிப்பாக குறைக்க வேண்டும்.
பரிகாரம் – சிவன் கோவிலுக்கு சென்று சனிக்கிழமை தோறும் காலபைரவருக்கு அகல்விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி, புதிய அனுபவங்களை தரும். நினைத்த காரியங்கள் நிறைவேற தடங்கல் உண்டாகும். ஆனால், சுபத்தில் முடியும். வீடு கட்டுதல் போன்ற சொத்து சேர்க்கும் யோகம் வரும். சொத்து சேர்க்க வைக்கும். அதேநேரத்ம் அஷ்டமச்சனி நடப்பதால் எச்சரிக்கையுடன் செய்யுங்கள். தேவையற்ற பேச்சுக்கள் சிக்கலை தரும். நண்பர்களிடம் உறவினர்களிடம் மவுனமாக இருப்பதே நல்லது. நீதிமன்றம், போலீஸ் ஸ்டேஷன் போன்ற வழக்குகள் வராமல் இருக்க உஷாராக இருக்கவும்.
பரிகாரங்கள்: ராகுகாலத்தில் சரபேஸ்வரரை வழிபட்டு வர பாதகமான பலனின் வீரியம் குறையும்.

இந்த ராகு- கேது பெயர்ச்சியில் அதிக பலனை அனுபவிப்பது நீங்கள் தான். எந்த செயலையும் நம்பிக்கையுடன், மன தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். மதிப்பு, மரியாதை அந்தஸ்து கூடும். வியாபாரிகளுக்கு வர்த்தகம் லாபம் தரும். விவசாயிகள் சாகுபடியால் லாபத்தை பார்ப்பார்கள். பணப்பயிர், எண்ணை வித்துகள் கைநிறைய காசை தரும். அரசியல்வாதிகள், திரைக்கலைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இது யோகத்தை தரும் காலகட்டம்.
பரிகாரம் – ராகுபகவான் வீட்டிறிருக்கும் திருநாகேஸ்வரத்திற்கு ஜென்ம நட்சத்திர நாளில் சென்று வழிபட்டு கூடுதல் நன்மைகளை பெறலாம்.

இது நல்ல பலன்களை தரக்கூடியது. புது வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை, புதிய தொழில்களில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை பெறலாம். அதே நேரம் அதிர்ஷ்டம் இருக்கிறதே என்று கண்மூடித்தனமாக செயல்பட வேண்டாம்- கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களால் நல்ல ஆதாயம் பெறலாம். தடைபட்ட சுப காரியங்கள் இனி குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் நடத்தலாம். புதிய திட்டங்கள் யோசனைகளை திட்டமிட்டு செயல்படுத்தினால் வெற்றி பெறலாம்.
பரிகாரம் – நாகநாத சுவாமி அல்லது நாகேஸ்வரன் என்ற பெயரில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும்.

புதுமையும், நுட்பமும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! உங்களது எண்ணம் தெளிவாக இருக்கும். கடினமான காரியத்தையும் கச்சிதமாக முடித்து காட்டுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் இதுவரை நன்மைகளும், கொஞ்சம் தீமையும் இருந்த நிலை மாறி, இதுவரை உங்கள் மீது இருந்த அதிருப்திகள் மறையும். சம்பள உயர்வு, நீண்ட கால கடன் போன்ற வகையில் பண வரவு இருக்கும். அத்துடன் பதவி உயர்வு அல்லது இடமாற்றத்தை எதிர்பார்க்கலாம். விவசாயிகளுக்கு விளைச்சல் கைகொடுக்கும்.
பரிகாரங்கள் – காலஹஸ்திக்குச் சென்று காளத்திநாதனுக்கு நடக்கும் ருத்ர அபிஷேகத்தில் பங்கு கொள்ளுங்கள்.

உங்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்க, பணம், பொருட்கள் கொடுக்கல் – வாங்கலில் எச்சரிக்கையும் செயல்படுங்கள். அதிக பேராசைப்பட்டு களமிறங்கினால் இருந்ததும் கையில் இருந்து போய்விடக்கூடும். பண விவகாரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். வேலை மாற்றம், ஊர் மாற்றம், வீடு பெயர்ச்சி போன்றவை நிகழ்ந்தாலும் அது பின்னர் வரும் நன்மைக்காகவே இருக்கும். உறவினர்கள், நண்பர்களுக்கு வாக்குறுதி, கியாரண்டி செய்துதருவது சிக்கலையே ஏற்படுத்தும்.
பரிகாரம் – சனிக்கிழமை நாளில் ராகுகாலத்தில் கருப்பு நிறமுள்ள உடைகளை வறுமையில் இருப்பவர்களுக்கு தானம் செய்யுங்கள்.

கேது பெயர்ச்சி நல்ல பலன்களையே தருகிறது. இதுவரை காரியங்கள் நிறைவேற தடையாக இருந்த கற்கள் அகன்று, செய்து முடிப்பீர்கள். நினைத்ததை செய்து முடிக்கக் கூடிய தெம்பும் திறனும் பெறுவீர்கள். உடலும் மனமும் புத்துணர்ச்சி பெற்று பொற்காலத்தை உண்டாக்கும். மனக்குழப்பங்கள் அகன்று மகிழ்ச்சி பெருகும். கடும் உழைப்பை காட்டி வெற்றியை பெருவீர்கள். அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டி பலரின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
பரிகாரம் – ராகு கேதுக்களால் ஏற்படும் நன்மைகளை மேலும் அதிகரிக்க, நாகநாதசுவாமி கோவில், முருகன் கோவிலில் அர்ச்சனை செய்யுங்கள்.

ராகு கேது பெயர்ச்சி சுப பலன்களையே தருகிறது. ராகுவால் உங்கள் காரியங்களில் நிலவி வந்த குழப்பம் அகலும். அத்துடன், புதிய சிந்தனையை கொண்டு எண்ணிய காரியத்தை அழகாக செய்து முடிப்பீர்கள். ராகுவால் செய்தொழில் முன்னேற்றம், லாபம், வெற்றிக்கனியை பறிப்பீர்கள். அரசுத்துறைகளால் ஆதாயம் பெறலாம். பயணங்களால் நல்ல பலனும் பணமும் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் இருக்கும். சுபச்செலவுகள் செய்து முடிப்பீர்கள். எண்ணெய் பண்டங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம் – நல்ல பலன்களை அதிகப்படுத்த திருநாகேஸ்வரம் சென்று வரலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

ராகு – கேது பெயர்ச்சியால் மோசமும் இல்லை பெரிய ஆதாயமும் இல்லை. செல்வாக்கு உயரும். எழுத்து துறையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பிற துறைகளில் இருப்பவர்கள் எதிலும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு தொடங்க வேண்டாம். முதலீடு செய்வதும் முழுப்பலனை தராது. தொழில் விரிவாக்கங்கள் கையை கடிக்கும். அயலாரால் வீண் வம்புகள் வரக்கூடும். தீர சிந்தித்து செயலாற்றும் காரியங்கள் வெற்றியை தரும்.
பரிகாரங்கள்:காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். ஹனுமனுக்கு நெய்தீபம் ஏற்றுவது சாலச் சிறந்தது.

வேலை, தொழிலில் இருந்துவந்த தடைகள், தற்போது நடக்கும் ராகு – கேது பெயர்ச்சியால் அகலும். பல புதிய மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் இறங்கும் காரியத்தில் பெரிய வெற்றி பெறாவிட்டாலும், நஷ்டமோ பாதிப்போ இல்லாமல் செய்து முடிப்பீர்கள். இறை பக்தி, ஆன்மிக சிந்தனைகளில் நாட்டம் கொண்டு, சுற்றி வரும் பகையை விரட்டுங்கள். பணியாளர்களுக்கு அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரிகள் நிதானத்துடன் செயல்பட வேண்டும். வருமானம் நன்றாகவே இருக்கும்.
பரிகாரங்கள் – காலபைரவருக்கு சனிக்கிழமைதோறும் அகல் தீபம் ஏற்றி வாருங்கள். சக்கரத்தாழ்வாரை தரிசித்து வழிபடுங்கள்.

அதிக நன்மைகள், கொஞ்சம் பிரச்சனைகள் என இரண்டுமே ராகு- கேது பெயர்ச்சியால் உங்களுக்கு ஏற்படலாம். ஆனால், திறமைகள் வெளிக்காட்டி, பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலை,தொழில், வியாபாரம் போன்றவை தடையின்றி நடக்கும். நிதி நிலைமை, சேமிப்பு அதிகரிக்கும். எதிரிகள் சரிவை சந்திப்பார்கள். வீட்டில் பொருட்களை வாங்கும் யோகம் வரும். பிரச்சனைகள் தீர ஆராய்ந்து தீர்த்து முடிப்பீர்கள். மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
பரிகாரங்கள் – ஏழைகளுக்கு உதவி செய்து அவர்களது ஆசி பெறுங்கள். வாராஹி அம்மனை வழிபட்டு வரலாம்.







