--- --:--:-- --

கோயில்களில் சிறப்பு தரிசனத்துக்கு இனி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு

3

மிழக கோயில்களில் கட்டண தரிசன மோசடிகளைத் தடுக்கவும், கூட்ட நெரிசலைக் குறைக்கவும் தமிழகத்தின் முக்கியக் கோயில்களில் இன்னும் ஓரிரு மாதங்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறை கட்டாயமாக்கப்பட உள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில், முக்கியத் தலங்களில் இன்னும் ஓரிரு மாதங்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறை கட்டாயமாக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

 

 

திருவண்ணாமலையில் வெளிமாநில பக்தர்களை ஏமாற்ற முயன்ற இடைத்தரகர் தப்பியோடிய சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகக் கோயில்களில் தரிசன மோசடிகளைத் தடுக்க இந்து சமய அறநிலையத்துறை புதிய அதிரடித் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில், முக்கியத் தலங்களில் இன்னும் ஓரிரு மாதங்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறை கட்டாயமாக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

 

 

ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, பக்தர்களிடம் கட்டண தரிசன டிக்கெட் வாங்கித் தருவதாகக் கூறி சில மர்மக் கும்பல்கள் பணப் பறிப்பில் ஈடுபட்டு வருவதாகத் தொடர் புகார்கள் எழுந்தன.

 

 

இதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் ஆந்திர பக்தர்களை விரைவாகச் சாமி தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்ற முயன்ற நபர் ஒருவர், கோயில் நிர்வாகத்தினர் பிடிக்க முயன்றபோது தப்பியோடினார். இச்சம்பவம் குறித்துத் திருவண்ணாமலை போலீசார் சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து அந்தப் போலி புரோக்கரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இத்தகைய மோசடிகளை முற்றிலும் ஒழிக்கவும், கோயில்களில் நிலவும் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் தமிழக அரசு இப்போது அதிரடிப் பாய்ச்சலில் இறங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் முக்கியத் திருக்கோயில்களில் ஆன்லைன் மூலமான தரிசன முன்பதிவு முறையைக் கட்டாயமாக்க இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.

முக்கியப் பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷ காலங்களில் இனி ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற அடிப்படையில் புதிய விதிகள் வகுக்கப்பட உள்ளன. இதன் மூலம் இடைத்தரகர்களின் நடமாட்டம் முடக்கப்படுவதோடு, பொதுமக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்துக் கிடக்கும் அவதியும் நீங்கும். இப்புதிய டிஜிட்டல் திட்டத்தை இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வர அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon