--- --:--:-- --

ஷீரடி சாய்பாபா கோயிலில் தவெக தலைவர் விஜய் சாமி தரிசனம்.!

1

டிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ல் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சி பெயரில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் போட்டியிட்டார். திருச்சி கிழக்கு, பெரம்பூர் என 2 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளார். வரும் மே மாதம் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது.

 

இந்த நிலையில் விஜய்யின் முதல் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில், விஜய் கோயில் கோயிலாக பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று தான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வேஷ்டி சட்டையில் சென்ற அவர், சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார். மேலும் அதிகாலை நடக்கும் விஸ்வரூப தரிசனத்திலும் பங்கேற்றார்.

 

 

தொடர்ந்து இன்று ஷீரடி சாய் பாபா கோயிலுக்கு சென்ற அவர், பாபாவின் பாதத்தை தொட்டு மனமுருக வேண்டி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon