--- --:--:-- --

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 30 நிமிடங்கள் மட்டுமே கேள்வி நேரம் ஒதுக்கப்படும்..!

10

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்திற்கு அரை மணி நேரம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் மழைக்கால கூட்டத்தொடர் 14ஆம் தேதி தொடங்குகிறது.

 

அடுத்த மாதம் நடைபெறும் இந்த தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தனிநபர் மசோதா தாக்கல் செய்யவும் அனுமதி இல்லை என்றும் கேள்வி நேரத்திற்குப்பின் ஜீரோ நேரமும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படவேண்டும் என மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலாளர்கள் அறிவித்திருந்தனர்.

 

அத்துடன் சனி, ஞாயிறு கிழமைகளில் விடுமுறை இன்றி கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதற்கும், ஜீரோ நேரம் குறைக்கப்பட்டதற்கும் கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள் கேள்வி நேரத்தை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அரை மணி நேரம் மட்டும் கேள்வி நேரத்திற்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துபூர்வமான கேள்விகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் துணை கேள்விகளுக்கான அனுமதி கிடையவே கிடையாது என்றும் மக்களவை மற்றும் நாடாளுமன்ற செயலகங்கள் அறிவித்திருந்தன.

 

இதனை வரவேற்றுள்ள எதிர்க்கட்சிகள் கேள்வி நேரத்தை மேலும் 30 நிமிடங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon