--- --:--:-- --

சீன பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்திக்கிறாரா பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்..?

9

ஷ்யா சென்றிருக்கும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீன பாதுகாப்பு துறை அமைச்சரை சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோ சென்று உள்ளார்.

 

சீன பாதுகாப்பு துறை அமைச்சர் வேயுங்க் மாஸ்கோவிற்கு வருகை தந்துள்ளார். தற்போது கிழக்கில் பதற்றம் நீடித்து வரும் சூழலில் ராஜ்நாத் சிங்கும், அவரும் சந்தித்து பேசி இருப்பதாக தெரியவருகிறது.

 

எல்லைப் பிரச்சினை பூதாகரமான பிறகு இரு நாட்டை சேர்ந்த அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெறும் முதல் பேச்சு வார்த்தை இது என சொல்லப்படுகிறது. சீன பாதுகாப்பு துறை அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon