சென்னையில் முதியோர் இல்லத்தில் 58 பேருக்கு கொரொனா பாசிடிவ்..!
சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் 58 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முதியோர் இல்லத்தில் 110 முதியவர்கள் உட்பட மொத்தம் 148 பேர் தங்கி இருக்கிறார்கள்.
அவர்களுக்கு இரண்டு கட்டமாக கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 58 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரொனா காரணமாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதியோர் இல்லத்தில் மீதமுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.






