தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி.! நோய் கட்டுப்பாடு நடவடிக்கை என்ன?
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சக அறிக்கையின் படி தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் பொதுமக்கள் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதன்படி மாநிலத்தில் பொது போக்குவரத்தை நடைமுறைப் படுத்தும் பொருட்டு 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் மண்டலம் ஒன்றில் இடம் பெற்றுள்ளன.
தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் இரண்டாம் மண்டலத்தில் வருகின்றன. மூன்றாவது மண்டலத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களும் நான்காம் மண்டலத்தில் நாகை, திருவாரூர் ,தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளன.
ஐந்தாம் மண்டலத்தில் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆறாம் மண்டலத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் வருகின்றன, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மாவட்டங்களில் மண்டலத்திலும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் எட்டாவது மண்டலத்தில் இடம் பெற்றுள்ளன.
இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என்றும், தனியார் பேருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ பாஸ் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்ல வேண்டுமானால் அதற்கு தற்போதுள்ள இ பாஸ் முறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.






