ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்தது அம்பலம்..!
தனியார் பள்ளி ஆசிரிய ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்புகளின் போது மாணவிகளை படம் பிடித்து ரசித்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் சென்னை கேகே நகர் தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அசோக்நகர் மகளிர் காவல் துறையினர் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
5 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஒவ்வொரு புகாருக்கும் 50 கேள்விகளை தயாரித்து பதிலளிக்கும்படி விசாரித்துள்ளனர். பாலியல் தொல்லை கொடுத்தது பள்ளி நிர்வாகத்திற்கு தெரிந்தே நடப்பதால் மாணவர்களுக்கான வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச வீடியோ பதிவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கேள்விகள் கேட்கப் பட்டதாக கூறப்படுகிறது.
விசாரணையின்போது ஆசிரியர் வகுப்பிற்கு வீடியோவில் வரும் மாணவிகளை ஜும் செய்து ஆபாசமாக புகைப்படம் எடுத்து ரசித்ததும் தெரியவந்திருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இன்று மாலை 3 மணிவரை விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.






