--- --:--:-- --

பாலசுப்ரமணியம் மறைவிற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்..!

3

ந்திர மாநிலம் நெல்லூரில் 1946ஆம் ஆண்டு இதே தேதியில் பிறந்தார் எஸ் பி பாலசுப்ரமணியம். எம்ஜிஆர் மூலம் கேவி மகாதேவன் இசையில் அவர் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பதினாறு மொழிகளில் பல ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார். தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளுடன் ஆறு முறை தேசிய விருதுகளை பெற்ற எஸ்பிபிக்கு மத்திய அரசு பத்ம விபூஷன் வழங்கி கௌரவித்தது.

 

கமல்ஹாசன், ரஜினிகாந்த், மோகன் போன்ற பல நடிகர்களின் குரலாக எஸ்பிபியின் குரல் தான் திரையில் ஒலித்துக்கொண்டிருந்தது. பாடகராக மட்டுமின்றி நடிகராகவும், இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தியவர் எஸ்பிபி.

 

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்பிபி செப்டம்பர் 25-ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். காலங்கள் மறைந்தாலும் இசையாய் மலரும் எஸ்பிபி என் குரலும் பாடல்களும் இன்னும் பல தசாப்தங்களுக்கு ரசிகர்கள் நினைவை விட்டு நீங்காது. இது எஸ்‌பி‌பியின் மறைவுக்கு பிறகு வரும் முதல் பிறந்தநாளாகும்.

 

Leave a Reply

Right Menu Icon