பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தான் நினைவுபடுத்தியதால் தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தான் நினைவுபடுத்தி சுட்டிக் காட்டிய பின்னரே புதிய கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சீரமைப்போம் தமிழகத்தை என்கிற பெயரில் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று உடுமலைப்பேட்டை மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் கமல்ஹாசனை பார்க்க காத்திருந்தனர்.
அவரை கவருவதற்காக மக்கள் நீதி மையம் கட்சியினர் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். பொள்ளாச்சியில் திருவள்ளுவர் திடலிலும் மகாலிங்கபுரத்தில் கொட்டும் மழையிலும் திரண்டிருந்த கூட்டத்தினர் மத்தியில் கமல்ஹாசன் உரையாற்றினார்.
அப்போது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது இனியும் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.






