--- --:--:-- --

நாய் துரத்தியதால் கடலில் விழுந்த புள்ளி மான்!

12

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நாய் துரத்தியதால் கடலில் விழுந்து தத்தளித்த புள்ளி மானை மீனவர்கள் மீட்டு காட்டு பகுதிக்கு அனுப்பி வைத்தனர். வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயம் நூற்றுக்கணக்கான புள்ளி மான்கள் உள்ளன.

 

அங்கிருந்து கடற்கரையோரம் சென்ற ஒரு நாய் துரத்தியதால் அச்சத்தில் கடலில் குதித்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நீந்தி சென்று ஆழமான கடல் பகுதியில் உயிருக்கு போராடியது. அந்த வழியாக மீன் பிடித்துக்கொண்டு திரும்பிய மீனவர்கள் அந்த மானை போராடி மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

Leave a Reply

Right Menu Icon