--- --:--:-- --

48 மணி நேரம் இடைவிடாமல் ஹேர் கட் செய்து சாதனை!

13

ரஷ்யாவில் தொடர்ந்து 2 நாட்களாக தூங்காமல் 90 க்கும் மேற்பட்டோருக்கு சலூன் கடைக்காரர் ஒருவர் முடிதிருத்தம் செய்து சாதனை புரிந்துள்ளார். கோஸ்ட்ராமா பகுதியை சேர்ந்த லடிஸ்லபோ டொமிட்டோ விச் என்பவர் திங்கள்கிழமை அந்த பணியை தொடங்கி புதன்கிழமை வரை 48 மணி நேரம் செய்தார்.

 

இடையிடையே உணவருந்த நேரம் எடுத்துக்கொண்ட அவர் பணியை தொடர்ந்தார். கொரொனா பரவல் முன்னெச்சரிக்கையாக முககவசம் அணிந்து இந்த பணியை அவர் மேற்கொண்டார். இந்த சாதனையை கின்னஸ் அமைப்புக்கு அனுப்ப அந்த கடை மேலாளர் திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon