--- --:--:-- --

பிரபல நடிகை மாயாவின் மகன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம்!

11

நடிகை மாயா என்பவரின் மகன் மீது தாக்குதல் நடத்திய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றிரவு நடிகை மாயாவின் விருகம்பாக்கம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரது மகன் விக்னேஷ் குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது.

 

இதையடுத்து விக்னேஷ் குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் அந்த கும்பலை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் விக்னேஷ் குமாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாகவும் முன் விரோதம் காரணமாக தாக்குதல் சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon