--- --:--:-- --

“தமிழக ஆட்சியாளர்கள் எதுவும் செய்வதுமில்லை.. கண்டுகொள்வதுமில்லை.. சொல்வதுமில்லை..!” அதிமுக மீது பாமக ராமதாஸ் கடும் பாய்ச்சல்..! கூட்டணி டமால் தானா?

18

ந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை ஆஹா ஓஹோவென புகழ்ந்தும் தமிழக அரசை கடுமையாக விமர்சித்தும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தமிழக அரசை ராமதாஸ் விமர்சித்து வருவதால், சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகுவது உறுதி தான் என்றே எதிர் பார்க்கப்படுகிறது.

 

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் வேளையில், பிரதான கட்சிகளிடையே தேர்தல் ஜூரம் இப்போதே தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது என்றே கூறலாம். தற்போது திமுக மற்றும் அதிமுக தலைமையில் உள்ள கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சில அணி மாறலாம் என்ற பேச்சும் நிலவுகிறது.

 

இதில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு இந்த தேர்தலில் கொஞ்சம் கூடுதல் மவுசு என்றே கூறலாம். ஏனெனில் வன்னியர் பெல்ட் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பாமகவுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளதால் அக்கட்சியை தங்கள் பக்கம் இழுக்க திமுக முயற்சிக்கிறது என்று தற்போது பேச்சு அடிபடுகிறது. தற்போதைய நிலைமையில் அதிமுகவில் கோஷ்டி பூசல் இருப்பதால் அதிமுகவை விட திமுக வே பெஸ்ட் என்ற மனநிலைக்கு பாமக வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை நிரூபிப்பது போலவே பாமக நிறுவனர் ராமதாஸ், சமீப காலமாக தமிழக அரசை மட்டுமின்றி மத்தியில் ஆளும் பாஜக வையும் பகிரங்கமாகவே கடுமையாக சாடி வருகிறார். குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக விவகாரம், மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன் வைத்து வருகிறார். தமிழக அரசின் மெத்தனப் போக்கையும் சுட்டிக்காட்டி கடுமையாக சாடி வருகிறார்.

 

இந்நிலையில் அதிமுக அரசு மீது இன்று டாக்டர் ராமதாஸ், டுவிட்டர் பதிவில் பகிரங்கமாக வைத்துள்ள விமர்சனங்கள், இனியும் அக்கூட்டணியில் பாமக நீடிக்குமா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அதுவும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் ஒப்பிட்டு தமிழக அரசை அவர் இடித்துக் காட்டியிருப்பது முக்கியமாகவே பார்க்கப்படுகிறது. அந்த டுவிட்டர் பதிவில் ராமதாஸ் நறுக்கென கூறியிருக்கும் வார்த்தைகள் இது தான் :

 

ஆந்திரத்தில் ஜெகன் ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதுவும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை… செய்யவும் மறுக்கிறார்கள் ! என அதிமுக அரசை ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுவது கிட்டத்தட்ட உறுதி என்றே தெரிகிறது. டாக்டர் ராமதாஸின் இந்த விமர்சனத்துக்கு அதிமுக என்ன எதிர்வினையாற்றப் போகிறது என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon