--- --:--:-- --

தலைமுடி உதிர்தல் காரணமாக பிளஸ் 1 மாணவன் தற்கொலை..!

6

லைமுடி உதிர்தல் காரணமாக பிளஸ் 1 மாணவன் தற்கொலை செய்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கல்லூரி மாணவி தனது தலை முடி உதிர்வதால் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சோகம் முடிவுக்கு வராத நிலையில் மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளியின் மகனான 11ஆம் வகுப்பு பயிலும் மாணவன் தலைமுடி அதிகமாக உதிர்வதாக கூறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோர்கள் மட்டுமின்றி மாணவ சமுதாயத்தை அலற வைத்துள்ளது.

 

டீன் ஏஜ் பருவத்தில் அனைவருமே தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவது பெற்றோர்களுக்கு தெரிந்தது தான். ஆனால் குடும்பத்தில் தங்கள் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாக பெற்றோர்கள் பார்த்து கொள்ள வேண்டும் என்பதையே இது போன்ற சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன.

 

டீனேஜ் பருவத்தில் உள்ள அனைவரும் தங்கள் சொந்தப் பிரச்சினைகள் பற்றி பெற்றோரிடம் தயங்காமல் கூறலாம்.

Right Menu Icon