கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி..!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை துறை ஆராய்ச்சி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் 10 அடி உயரம் கொண்ட மரக்கன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நட்டு வைத்தார்.
மேலும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி நூற்றாண்டு விழாவை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொண்டாடினார்.
முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ள இந்த திட்டத்தின் மூலம் நேற்று ஒரு நாள் மட்டும் 46 ஆயிரம் மரக்கன்றுகள் நெடுஞ்சாலை ஓரங்களில் நடப்பட்டன. அடுத்து நான்கு மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் வேங்கை, ஆலமரம் உள்ளிட்ட ஐந்து லட்சம் வரை கன்றுகள் நடப்பட உள்ளன.





