காரில் அமர்ந்தபடி ஃபோட்டோஷூட்..! போலீசார் வழக்கு பதிவு..!
மராட்டிய மாநிலத்தில் முகக் கவசம் அணியாமல் ஸ்கார்பியோ காரில் அமர்ந்தபடி வந்த மணப்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
புனேவில் உள்ள டைப் கார்டு பள்ளத்தாக்கில் கார் மீது அமர்ந்து வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய மணப்பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
எவ்வித கொரோனா தடுப்பு விதிகளையும் பின்பற்றாமல் போட்டோஷூட் நடத்தப்பட்டதால் அடுத்தநாளே மணப்பெண் கார் ஓட்டுநர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் போட்டோஷூட்க்கு பயன்படுத்தப்பட்ட கேமராவையும் பறிமுதல் செய்தனர்.





