கல்விக்கடன் ரத்து தொடர்பான மனு தள்ளுபடி..!
கல்விக்கடன் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கல்விக்கடனை ரத்து செய்வதோடு,மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பான புதிய திட்டத்தை வகுக்க வேண்டும் என ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும்போது, மனுதாரர் தனது மனுவை திரும்பப் பெறுவதாக கூறியதை அடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.





