மயிலேறிபாளையம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு நிகழ்வாக மக்களுக்கு ஆர்செனிக் ஆல்பம் மருந்துகளை இலவசமாக வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் !!!
கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மயிலேறிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள்,ஊராட்சி மன்ற தூய்மைப்பணியாளர்கள், தூய்மைக்காவலர்கள், குடிநீர் பணியாளர்கள், நியாய விலைக்கடை பணியாளர்கள், சலவைத்தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள், பேக்கரி, மளிகைக்கடைக்காரர்களுக்கு கொரோனா தடுப்பு நிகழ்வாக இலவசமாக ஹோமியோபதி ஆர்செனிக் ஆல்பம் மாத்திரைகளை ஊராட்சி மன்ற தலைவர் கோமதி திருமூர்த்தி 500 க்கும் மேற்பட்டோர்க்கு இன்று இலவசமாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன்,சுந்தரி,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பீமன்,ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுப்ரமணியம்,வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி,பவித்ராதேவி, செண்பகம், செந்தில்குமார், மகேஸ்வரி, மணிமேகலை, கிருஷ்ணவேணி, தீபன்குமார், ஊராட்சி செயலர் கார்ததிகேயன் மற்றும் ஊராட்சி பணியாளர் பலர் கலந்து கொண்டனர்.






