குதிரைப்படை காவலர்கள் கழவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாக புகார்…!
சென்னை குதிரைப் படையில் பணியாற்றும் காவல்துறையினரை அலுவல் ரீதியான பணிகளை தவிர்த்து பிற பணிகளில் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டம் ஒழுங்கு விழாக்கால பாதுகாப்பு பணி, கடற்கரை பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்த சென்னை குதிரை பிரிவு காவல்துறையினர் பொது முடக்கம் காரணமாக அத்தகைய பணிகளில் ஈடுபடவில்லை.
இந்நிலையில் அவர்களை எடுபிடி வேலைகளுக்கு அதிகாரிகள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி கழிவறைகளை சுத்தப்படுத்துதல், கட்டட பணிகள் உள்ளிட்ட வேலைகளை செய்ய கட்டாயப்படுத்துவதாக குதிரைப்படை காவலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிடுவோம் இயலவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.






