பக்கத்து வீட்டு பெண்ணை கத்தியால் வெட்டி கொலை ..!
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் கடன் பிரச்சினை காரணமாக பக்கத்து வீட்டு பெண்ணை கத்தியால் வெட்டி கொலை செய்து மூன்றரை சவரன் நகையை பறித்து சென்ற சதீஷ் என்பவரை சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.
கொலை செய்த நபர் வீட்டிற்கு சென்று சேர் செய்து குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்து கூட்டத்தோடு கூட்டமாக இன்று வேலை பார்த்ததாக விசாரணையில் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஐஜி பவானிஸ்வரி குற்றங்களை தடுக்க வீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் கொலை செய்யப்பட்ட பெண்ணுடைய மகளை உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.





