மணமக்கள் கையில் நீட் எதிர்ப்பு பதாகை..!
சென்னையை அடுத்த பூவிருந்தவள்ளியில் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு தாம்பூல பைகளுக்கு பதிலாக சட்ட புத்தகம், திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டன.
செம்பரம்பாக்கத்தை சேர்ந்த ஜான்சன் – நிவேதா ஜோடியின் திருமண வரவேற்பு விழா பூவிருந்தவள்ளியில் நடைபெற்றது. விழாவின் மேடையில் தோன்றிய புதுமண தம்பதி நீட் தேர்வுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இருந்தனர்.
மேலும் விருந்தினர்களுக்கு வழக்கமாக வழங்கும் தாம்பூல பைகளுக்கு பதிலாக சட்ட புத்தகம் வழங்கப்பட்டது. சிறார்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.





