வருங்கால முதல்வர் உதயநிதி ஸ்டாலின்-அன்பில் மகேஷ் பொய்யாமொழி
திருச்சி சிங்காரத் தோப்பு பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் 100-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
மேலும் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து விழாவில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில், 100-வது ஆண்டு விளையாட்டு போட்டிக்கு தகுதியான, சரியான நபரை தான் சிறப்பு விருந்தினராக நீங்கள் அழைத்து உள்ளீர்கள்.
இவர், நேற்று நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற அறப்போராட்டத்தில் எழுப்பிய உரையானது வரலாற்று சிறப்பு மிக்கதாகும். மனிதன் என்பர் தெய்வமாகலாம், மற்றவர்களுக்காக உழைப்பவன் தலைவனாகலாம் என்ற சொல்லுக்கு உகந்தவாறு செயல்பட்டார். தொடர்ந்து செயலாளராக இருந்தவர் இன்று எங்கள் தலைவனாக உள்ளார்.
1924-ம் ஆண்டு கலைஞர் பிறந்தார், அவருக்கு ஓர் ஆண்டு முந்தையதாக இந்த கல்லூரி பிறந்தது. தொடர்ந்து திராவிட மாடல் கொள்கையை முழுமையாக இந்த கல்லூரி செயல்படுத்தி வருகிறது.
பெண்கள் கல்வியை கண்டிப்பாக கற்க வேண்டும் இந்த சமுதாயத்தில் அவர்கள் தனித்து நிற்க வேண்டும் என மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து கூறிக் கொண்டே இருப்பார், அதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்தார் என தெரிவித்தார்.





