நிர்வாண வீடியோ கால்.. இளம்பெண்ணுக்கு மிரட்டல்..!
புதுச்சேரியை சேர்ந்த் இளம்பெண் ஒருவருக்கு சென்னையை சேர்ந்த திலீப் குமார் என்பவருக்கும் சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இருவரும் நெருங்கிப்பழகி வந்துள்ளனர்.
நெருக்கம் அதிகமாகவே இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்றவற்றில் தகவல்களை அவர்கள் இருவரும் பரிமாறிக் கொள்கின்றனர். ஒரு சில வாரங்கள் சென்ற பிறகு அந்தப்பெண் தன்னுடன் இணைய வழியே பழகிய சென்னையைச் சேர்ந்த திலீப் குமார் என்பவரிடம் இது நமக்கு சரிவராது நாம் காதலிக்க வேண்டாம் என்று கூறிவிட்டு நண்பர்களாக வேண்டுமென்றால் நம் நட்பை தொடலாம் என்று கூறியுள்ளார்.
இதற்கு திலீப் குமார் அதெல்லாம் சரி வராது என்று கூறி அந்த பெண்ணை தொந்தரவு செய்ய ஆரம்பிதத்தார். நீ என்னிடம் பேசவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் கையை அறுத்துக் கொள்வேன் என்பது போன்ற பல்வேறு மிரட்டல்களை அந்தப்பெண்ணுக்கு விடுகிறார்.
இது என்னடா தொந்தரவு ஆகிவிட்டது என்று அந்தப்பெண் தான் உபயோகப்படுத்திய சிம் கார்டை உடைத்து தூக்கி போட்டார்.இருவரும் பழகிய பொழுதே திலிப் குமாரிடம் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலருடைய தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளார்.
சிம்மை உடைத்து விட்டு தன்னிடம் பேசவில்லையே என்ற ஆத்திரத்தில் திலீப் குமார் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு போன் செய்து மிகவும் கீழ்த்தரமாகவும் அசிங்கமாகவும் இளம்பெண்ணை பற்றி பேச ஆரம்பிக்கின்றார். அது அவருக்கு தெரிய வரவே பயந்துபோய் திலீப் குமாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இது பற்றி இணைய வழி காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், “தெரியாத நபர்களிடமோ அல்லது தெரிந்தவர்களிடமும் இதுபோன்ற வீடியோ காலில் பேசுவதை தவிர்க்க வேண்டும். தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களையோ வீடியோக்களையோ மற்றவர்களுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
இந்த வருட மட்டும் இணைய வழி காவல் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான இதுபோன்ற பெண்களுடைய தனிப்பட்ட புகைப்படத்தையோ அல்லது வீடியோக்களையும் மார்பிங் செய்தோ அல்லது அவர்கள் அனுப்பிய படங்களையும் வைத்துக்கொண்டு மிரட்டல் சம்பந்தமாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 20 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தற்போது திலீப்குமாருடன் சேர்த்து 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்தனர்.





